‘மோதல் உக்கிரம்’ – சு.கவை வெளியேற்ற மொட்டு கட்சி உறுப்பினர்கள் வியூகம்!

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு எமக்கு தேவையில்லை. ஆட்சியை முன்னெடுப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் அவசியமில்லை.” – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் கைகளிலுயே தங்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என தெரிந்துதான், சுதந்திரக்கட்சிக்காரர்களுக்கு வேட்புமனு வழங்க வேண்டாம் என நான் அன்றே வலியுறுத்தினேன். தற்போது அரசில் இருக்க முடியாவிட்டால் வெளியேறட்டும். அதனால் எமக்கு பாதிப்பு இல்லை.

அரசுக்குள் இருந்துகொண்டு – சிறப்புரிமைகளை அனுபவித்தபடி விமர்சனங்களை முன்வைப்பதைவிடவும், வெளியேறுவதே நல்லது. ” – என்றும் அமைச்சர் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles