மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக இளைஞர் முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த, இளைஞர் மாநாடு இன்று சனிக்கிழமை (14.09.2024) ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், மலையக இளைஞர் முன்னணியின் தலைவருமான இராதாகிருஸ்ணன் ராஜாராம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் குடும்பத்தின் பேரனும் சர்வதேச அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஸ்தாபக இணைத்தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே.எம்.ஜே சேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விசேட அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டதுடன் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற இதயக்கனி சஞ்சிகையின் வெளியீட்டாளரும் பிரதம ஆசிரியருமான இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன் , மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் , பொருளாளர் தாழமுத்து சுதாகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பெருந்திரளான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.