ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு வந்த டயானா கமகே, அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததால் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
இதனையடுத்து ஆளுங்கட்சிக்கு சார்பாக செயற்பட்டுவந்தார். இந்நிலையிலேயே தற்போது ஐ.தே.க. பக்கம் தாவவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.