யாழில் இருந்து சட்டவிரோதமாக தமிழகம் சென்றவர் கைது!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் தொண்டி கடற்கரை சென்று அங்கிருந்து மண்டபம் பகுதிக்குச் சென்ற ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்தோர் அமல்ராஜ் (வயது 33, மன்னார்) என்பவரே இவ்வாறு இந்தியா சென்றுள்ளார்.
மேற்படி நபர் யாழ்ப்பாணம், குருநகரில் இருந்து மீன்பிடிப் படகில் சென்று தொண்டியில் இறங்கி அங்கிருந்து இராமேஸ்வரம் பஸ்ஸில் மண்டபம் பகுதிக்குச் சென்ற சமயம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரு தடவை இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் மீண்டும் சட்டவிரோதமாக இந்தியா சென்றுள்ளார்.

தலைமன்னாரில் இருந்தே படகில் வந்ததாகத் தமிழ கப் பொலிஸாரிடம் இவர் பொய் உரைத்தபோதும் கைத் தொலைபேசியில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆல யக் கோபுரம் உள்ளிட்டவற்றை ஒளிப்படம் எடுத்திருப்ப தன் மூலம் யாழ். குருநகரில் இருந்து பயணித்தமை இந்தி யாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதேநேரம் இவர் பயணித்த படகின் இலக்கமும் ஒளிப் படத்தில் தெரிகின்றது.

Related Articles

Latest Articles