யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைபொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் ஏழாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles