யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை மர்ம வீடொன்று கரை ஒதுங்கியுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, நிலநடுக்கம் போன்றவை பல தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டன.
இதன்போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது. குறித்த வீட்டினை பார்வையிடுவதற்கு பல மக்கள் சென்றவண்ணமுள்ளனர்.










