யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற தாக்குதலில் சுதுமலைப் பகுதியைச் சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன் (வயது 51) என்பவரே படுகாயமடைந்த நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் மேற்படி நபர் மீது வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










