யாழில் கோர விபத்து – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் , இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி உட்பட ஆண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles