யாழ்ப்பாணத்தில் வீதியால் நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்த ஒன்றரை பவுண் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற சம்பவம் யாழ்.சங்கானை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சங்கானையை சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர் சங்கானை நகரத்திற்கு சென்றுவிட்டு அம்பிகாவத்தை வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அந்த வழியாக துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் குறித்த நபரை வெட்டிவிட்டடு, ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் மோதிரத்தை பறித்ததுடன் அவரிடமிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
