யாழில் திடீரென காணாமல்போகும் பிள்ளையார் சிலைகள்! நடப்பது என்ன?

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 4 பிள்ளையார் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துட்பட்ட கெமுனு விகாரை பகுதியிலுள்ள பிள்ளையார் சிலையொன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை மகாஜனா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஆலயத்தில் இரு பிள்ளையார் சிலைகள் காணாமல் போயுள்ளன.

பலாலி பொலிஸ் பிரிவிலுள்ள கோவிலொன்றிலும் பிள்ளையார் சிலையொன்று காணாமல்போயுள்ளது.

இவை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles