யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம்!

இந்திய நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு ‘யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என தற்போது பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட ‘யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” 2023ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்ட நிகழ்வில் அக்கட்டடத்துக்கு “திருவள்ளுவர் கலாசார மையம்” என பெயர் சூட்டி பெயர்ப்பலகையை திறந்துவைத்தனர்.
‘யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” என்ற பெயர் மாற்றப்பட்டு, “திருவள்ளுவர் கலாசார மையம்” என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் உட்பட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம் இக்கட்டடத்தில் “யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என மீண்டும் பெயர் மாற்றப்பட்டு, பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles