ஊர்காவற்துறை, குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஐவர் படும் காயம் அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. மேலும் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.
இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.










