யாழில் மர்மமாக மாயமாகும் முதியவர்கள்: பின்னணி என்ன?

யாழ். மாவட்டத்தில் வயோதிபர்கள் மிகவும் மர்மமான முறையில் காணாமல்போகும் சம்பவங்களின் பின்னணி தொடர்பில் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ யாழ்.மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த வயோதிபர்கள், பிரபல வர்த்தகர்களும் காரணங்களற்று திடீரென காணாமல்போகும் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த ஏழு வருடங்களாக நடைபெறும் சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இத்தகைய சம்பவங்கள் வயது மூப்பினால் தன்னிச்சையாக இடம்பெறுபவை என அடையாளப்படுத்தப்படாத நிலையில், அவற்றின் பின்னணி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகரான வேலுபிள்ளை நடராசா (வயது – 63) கடந்த 2017 ஜுலை 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், மாதாந்த மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார்.

இவரின் மகனான நடராஜா குகராஜ் ஊடகவியலாளராக கடமையாற்றுகின்றார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு, பத்திரிகை விளம்பரம், சமூகவலைத்தளங்கள் மூலமான பதிவுகள் என ஏழு வருடங்களாக தேடுதல் நடத்தும் எந்த முடிவும் கிட்டவில்லை.

அதேபோல யாழ்.புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி யோகம்பா சோபிநாதன் (வயது – 63) என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளார். இவர் எங்கே என்பது இதுவரை தெரியாது.

யாழ். புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரும், வர்த்தகதுறை சார்ந்து இலங்கை அரசால் தேசமான்ய விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவருமான, புங்குடு தீவு மக்களால் அதிகம் அறியப்பட்டவருமான வைத்திலிங்கம் கணகலிங்கம் (வயது – 82) 2024 மே 12 ஆம் திகதி மதியவேளை, அவரின் வீட்டின் முன்பாக இருந்தவேளை திடீரென காணாமல்போயுள்ளார்.

பிரிதொருவரின் உதவியற்று நடந்து செல்லவோ அல்லது வாகனங்களில் ஏறி செல்லவோ முடியாத நிலையில் இருந்த அவர், திடீரென வீட்டு வாசலில் இருந்தே காணாமல்போயுள்ளமை மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. இதுவரை அவர் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை.

இவ்வாறு வயோதிபர்கள் காணாமல்போதல், இளைஞர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுதல், கைதுகள், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் என்பன இங்கு நடக்கின்றன. இந்த நாட்டின் நீதி, சிவில் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி சிந்தியுங்கள்.

யாழ்.மண்ணில் இந்த மூன்று வயோதிபர்களுக்கு மேலதிகமாக இன்னும் பலர் காணாமல்போயிருக்ககூடும். இவர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles