யாழில் மலையக சகோதரர்கள் மரணம் – விசாரணை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவரும் களஞ்சியசாலையில் சென்று கதவை பூட்டி விட்டு நித்திரைக்கு சென்றபோதே அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோதும், களஞ்சியசாலையில் உறக்கத்தில் இருந்த இருவரும் உடல் கருகி பலியானதுடன் அங்கிருந்த பொருட்களும் தீயில் எரிந்ததால் அருகில் இருந்த வாகன தரிப்பிடத்திலும் தீப்பரவி சேதமடைந்தது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதானவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

களஞ்சியசாலையில் இருந்த சிலிண்டர் தீ விபத்துக்கு காரணமாக இருக்குமா என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிஷாந்தன், தடயவியல் பொலிஸார், பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles