யாழில் ரயர் கொளுத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொளுத்திய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை டயர்கள் கொளுத்தப்பட்டன. சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து டயர் கொளுத்திய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததுடன் , வீதியில் எரிந்த டயர்களையும் அப்புறப்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையிலும் , இன்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் என்பதனாலும் , வடக்கு கிழக்கில் பாதுகாப்புகள் , கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் குருநகரில் வீதியில் டயர் கொளுத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles