யாழில் சிரமதான பணியின்போது வெடித்த மர்மப் பொருள் – இருவர் படுகாயம்

யாழ்.கோப்பாய் – கைதடி வீதியில் சிரமதான பணியின்போது மர்ம வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கோப்பாய் – கைதடி வீதியில் சிரமதான பணி மற்றும் மரநடுகையில் ஈடுபட்டிருந்த நிலையில்,

குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,

காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில் தாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்

இந்த பகுதியில் புல்லு வெட்டும் பணியில் ஈடுபடுவதாகவும் இன்றைய தினம் வழமை போல் தாங்கள் மரம் நடுவதற்காக புல்லு வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென மர்மப் பொருள் வெடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்.தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles