யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மாவட்டத்தில் முதலிடம்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு நேற்று மாலை வெளியாகியது. இதில் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் பிரசோதன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இதேநேரம் யாழ். தொன் பொஸ்கோ மாணவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

Related Articles

Latest Articles