யாழ்ப்பாணம் – பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் நேற்று மாலை உயிரிழந்தனர்.
கொக்குவில் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த
ஜெயகுமார் ஜெனீசன், உதயராஜா கஜந்தன் என்ற 17 வயதான இருவரே உயிரிழந்தனர்.
பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் சுழியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள் பொலிஸாரின் உதவியுடன் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
