யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தின நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை என்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்றைய (07.07.2020) திவயின பத்திரிகை ‘யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தின கொண்டாட்டம் – பாதுகாப்பு படையினரால் விசாரணைகள் ஆரம்பம்’ என தனது பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் சுப்பிரமணியன் ஐங்கரன் தெரிவிக்கையில், இது தொடர்பில் நிர்வாகத்திற்கு எதுவித அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை என கூறினார்.
மேலும், இவ்வகையான கொண்டாட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக தனக்குத் தெரியாது என்றும், அந்த விசாரணையை மேற்கொள்ள அவரிடம் எந்த ஆதரவும் கோரப்படவில்லை என்றும் தலைமை மாணவர் ஆலோசகர் டாக்டர் ராஜுமேஷ் கூறினார்.