யாழ். மாநகரசைபயின் பாதீடு நிறைவேற்றம்!

யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது 3 மேலதிக வாக்குகளால் யாழ் மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெற்றிபெற்றது.

45 உறுப்பினர்கள் யாழ் மாநகர சபையில் அங்கம் வகிக்கின்ற நிலையில் 23 பேரின் ஆதரவு இருந்தால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறும் என்ற நிலையில், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 2 பேரும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் வாக்களித்தனர்.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 பேரும் ஐக்கிய தேசிய கட்சியின் இருவரும் வாக்களித்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 பேர், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேர், ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் 10 பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 பேர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 2 பேர்,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவர் என மொத்தமாக 45 உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேரில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக 10 பேரும் எதிராக 3 பேரும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles