யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக காலை வேளையில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் உள்நுழைந்தனர்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது.

தன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள், அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கலந்துகொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓ.எம்.பி. வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகின்றோம், இரண்டு இலட்சம் ரூபா வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்சவே வெளியேறு எனக் கோஷம் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles