யாழ்.விஜயத்தின்போது ஜனாதிபதி செம்மணிக்கும் செல்லக்கூடும்!

 

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட வாய்ப்புள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை. யாழ். விஜயத்தின்போது செம்மணி செல்லக்கூடும் என்ற ஊகத்தை வெளிப்படுத்தினார்.

 

Related Articles

Latest Articles