யுக்திய ஒப்பரேஷனுக்கு அஞ்சி நுவரெலியாவில் பதுங்கிய குடு ரொஷான் கூண்டோடு கைது!

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பிரதான சந்தேகநபரான ‘குடு ரொஷான்” , அவரின் சகோதரன் மற்றும் அவர்களின் மேலும் சில உறவினர்கள் வரக்காபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு நபரிடமிருந்து 1 கிரோம் ஹெரோயின் போதைப்பொருளும் இன்னுமொரு நபரிடமிருந்து 875 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் காரணமாக இவர்கள் நுவரெலியா பிரதே சத்தில் வீடொன்றை எடுத்து அங்கு தங்கியிருந்துவிட்டு, பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டது என எண்ணி மீண்டும் கொழும்புக்கு வந்துக்கொண் டிருந்தபோதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனார்.

சந்தேகத்துக்கு இடமான இரு வாகனங்களில் சிலர் கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர் எனக்கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய காரொன்றும் வேனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து 10 ஆண்களை யும், ஐந்து பெண்களையும், இரு சிறுமியர் உட்பட 08
குழந்தைகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனார்.

இவர்கள் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களில் 04 ஆண்களும், மூன்று பெண்களும் தற்போது மட்டக்குளி பொலிஸாரினால் தேடப்பட்டுவரும்போதைப்பொருள் வியாபாரிகள் என்பதும் – விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

பொலிஸாரின் தரவு கட்டமைப்பை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, இவர்களில் 07 பேர் மீது இதற்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. சிறார்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles