நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 703 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 525 சந்தேகநபர்களும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குற்றத்தடுப்பு பிரிவினரால் பட்டியலிடப்பட்டுள்ளவர்களில் 178 சந்தேகநபர்களும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
சந்தேகநபர்களிடமிருந்து 204 கிராம் ஹெரோயின், 118 கிராம் ஐஸ் போதைப்பொருள், 3 கிலோ 100 கிராம் கஞ்சா உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 525 சந்தேகநபர்களில் 6 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
போதைப்பொருளுக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.










