‘யுக்திய ஒப்பரேஷன்’ ஆரம்பிக்கப்பட்டு 19 நாட்களுக்குள் 26 ஆயிரத்து 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயிரத்து 134 பேர் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 549 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய கடந்த 17 ஆம் திகதி ‘யுக்திய ஒப்பரேஷன்’ ஆரம்பமானது.
கடந்துள்ள 19 நாட்களில் 13 கிலோ 378 கிராம் ஹெரோயின், 9 கிலோ 436 கிராம் ஐஸ், 329 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
‘யுக்திய ஒப்பரேஷன்’ ஆரம்பிக்கப்பட்டு 19 நாட்களுக்குள் கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் பெறுமதி 963 மில்லியன் ரூபாவாகும்.
