தேசபந்து தென்னகோனின் யுக்திய நடவடிக்கையென்பது ஊடகக் கண்காட்சியாகும். அதன்மூலம் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு நீதி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்தபோதிலும், அதனை ஏற்பதற்கு எதிரணிகள் தயாரில்லை. அதனால்தான் வழமைபோல போலித்தனமான அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றன.
தேசபந்து தென்னகோனின் யுக்திய நடவடிக்கை என்பது ஊடக கண்காட்சியாகும். அதன்மூலம் அப்பாவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை விசாரித்து நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசபந்துவுக்கு துணைநின்ற அரசியல் தலைவர்களை மக்களே வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இது தேசபந்து தொடர்பான விவாதம் என்பதால் அவர் பற்றி கதைக்கின்றோம். நேர்மையாக செயற்படும் அரச ஊழியர்கள் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. அவர்களின் நியாயமான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் என்றும் முன்னிற்கும்.” – என்றார்.
