பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்ளுக்கான நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவிருந்த யுவதியை தடுக்கும் முகமாக, அவ் யுவதியின் வீட்டின் பின்புறத்தில் கசிப்பு மதுபானம் நிரப்பப்பட்ட இரு கேன்களை மறைத்து வைத்த நபரை, கராண்டுகலைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
மொனராகலைப் பகுதியின் கராண்டுகலை என்ற இடத்திலேயே, 20-11-2020ல் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்டநபர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது, குறிப்பிட்ட யுவதி நேர்முகப்பரீட்சைக்கு தோற்றினால்,தொழில் கிடைத்துவிடும். அதனைத் தடுக்கும் முகமாகவே, கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை அவ் யுவதியின் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்தமையை,பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த யுவதி,பொலிஸ் கான்ஸ்டபிள்ளாக தொழில் கிடைத்துவிட்டால் நம்மால் வாழமுடியாமல் போய்விடுமென்றஅ ச்சத்தினாலே,தான் மேற்படிசெயற்பாட்டினை மேற்கொண்டேன். யுவதியின் வீட்டின் பின்புறம் கசிப்புநிரப்பப்பட்ட இரு கேன்களை மறைத்துவைத்ததோடு,யுவதியே,கசிப்பு தயாரித்து விற்பனை செய்வதாக தகவலையும் பொலிசாருக்கு வழங்கினேனென்று, கைதுசெய்யப்பட்ட நபர் பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட நபரின் வீட்டை சுற்றிவலைத்த கராண்டுகலைப் பொலிசார், அங்கு மேற்கொண்ட சோதனையின் போது,மேலும் கசிப்பு நிரப்பப்பட்ட மூன்று கேன்களைகண்டுப் கைப்பற்றினர்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து,குறிப்பிட்ட யுவதியின் வீட்டின் பின்புறத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை மீட்டதுடன், குறிப்பிட்ட யுவதியையும் கைதுசெய்தனர்.ஆனால்,மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, யுவதியின் அயல் வீட்டைச் சேர்ந்தவரும்,பொலிசாருக்கு தகவல் வழங்கிய நபரை கைது செய்து விசாரணைக்குற்படுத்தப்பட்டபோது, அந் நபர் திட்டமிட்டு இச் செயலைப் புரிந்தமை தெரியவந்துள்ளது.
எம். செல்வராஜா, பதுளை










