‘ரகு தாத்தா’ படத்தில் புதுமைப்பெண்ணாக தோற்றமளிக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய், எம். எஸ். பாஸ்கர், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, இஸ்மத் பானு, ஆதிரா பாண்டிய லக்ஷ்மி, ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பெண்கள் மீதான திணிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ்- வீட்டில் காலம் காலமாக பெற்றோர்களால் விதிக்கப்படும் நிபந்தனைகளை மீறும் புதுமை பெண்ணாகவும், தனக்கான தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளும் கதாபாத்திரமாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், காட்சிகளும், வசனங்களும் கவனத்தை ஈர்ப்பதாலும், படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles