சிறை தண்டனை அனுபவித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து ஜனாதிபதிக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
2021 ஜனவரி 12 ஆம் திகதியில் இருந்து ரஞ்சன் ராமநாயக்க சிறை தண்டனை அனுபவித்துவருகின்றார்.