ரஞ்சன் திருடனோ அல்லது மோசடிக்காரனோ அல்ல அவர் ஒரு மனிதாபிமானி – சஜித்

வெசாக் விடுமுறை தினத்தை முன்னிட்டு 240க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றாலும் ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் விடுதலைசெய்ப்படவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை எனவும் தெரிவித்தார்.

திருடனோ,மோசடிக்காரனோ அல்லாத ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் மனிதாபிமானமுள்ள ஒரு தலைவர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவருக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் முகமாக தான் போராடுவதாகவும் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (15) காலை பார்வையிட சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles