ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் சபை அமர்வில் பங்கேற்காவிட்டால் அவரின் எம்.பி. பதவி பறிபோய்விடும்.
எனினும், 3 மாதங்களுக்கு ஒரு தடவை விடுமுறை பெறலாம். அவ்வாறானதொரு அனுமதியை ரஞ்சனுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தால் நான்கரை வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பகா மாவட்டத்தில்போட்டியிட்டு ரஞ்சம் ராமநாயக்க வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.