ரஞ்சன் விவகாரம் – சபைக்குள் பிரதான எதிர்க்கட்சி போராட்டம்

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் சபாநாயகர் வழங்கிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியின் இன்று சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்பு பட்டியணிந்து, பதாதைகளை தாங்கி நீதிக்காக குரல் எழுப்பினர்.

இதன்போது ஆளுங்கட்சியினருக்கும், எதிரணி உறுப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடும் அமளி துமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் எதிரணியின் போராட்டம் தொடர்ந்தது. சபாநாயகரின் முடிவு தவறானது என சுட்டிக்காட்டியதுடன், உயர்நீதிமன்றத்தை நாடும் உரிமை ரஞ்சனுக்கு இருக்கையில் ஏன் அவசரமாக தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.

Related Articles

Latest Articles