ரணிலின் பாதுகாப்பு அதிகாரிமீது தாக்குதல்: சந்தேகநபர் கைது

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தனியார் ஊடக நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (செப்டம்பர் 30) விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, இச்சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (அக்டோபர் 01) கொம்பனித்தெரு காவல் நிலையத்திற்கு வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த ஒளிப்பதிவாளர் சட்டத்தரணி ஒருவருடன் காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்தே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கிருந்த ஊடகவியலாளர்களால் பதிவு செய்யப்பட்ட காணொளியில், VIP பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை இந்த ஒளிப்பதிவாளர் தனது கெமராவில் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பரவியது.

இதனிடையே, இச்சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி நாரஹேன்பிட்டியில் உள்ள காவல் துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles