“ ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், ஊடகவியலாளரொருவர் கமராவில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்.”- என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.
பாதுகாப்பு அதிகாரி இலக்கு வைக்கப்பட்டாரா, அல்லது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வைக்கப்பட்ட இலக்கு தவறுதலாக பாதுகாப்பு அதிகாரிமீது பட்டதா என்பது உட்பட அனைத்து விடயங்கள் பற்றியும் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் இன்று வலியுறுத்தினார்.










