‘ரணிலின் பெயரே நானே முன்மொழிந்தேன்’ – நவீன் தெரிவிப்பு

” ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பாராளுமன்றம் செல்வதற்கு தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானவர், தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கவே என்பதில் மாற்று கருத்து கிடையாது. அவர் சபைக்கு செல்ல வேண்டும் என அவரின் பெயரை ஜனவரி மாதம் நானே முன்மொழிந்தேன்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஆளுங்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் பேச்சு நடத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் ரணிலுடன் இணைந்து செயற்படுவார்கள் – என்றும் நவீன் கூறினார்.

Related Articles

Latest Articles