ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்த மிகப்பெரிய அரசியல் கூட்டணி

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கேஸ் சிலிண்டரை சுற்றி இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இன்னும் பல கட்சிகள் இதில் இணைய உள்ளதாக ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்தார்.

அரச ஊழியருக்கான தபால் மூல வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில்   நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு சுமார் 20 நாட்கள் கடந்துள்ளன.

இக்காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் எமது வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அதை நன்றாகத் கண்டுகொண்டுள்ளோம். தேர்தல் நடவடிக்கைகளுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன.

அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஆரம்பித்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே பெரும்பான்மையான அரச ஊழியர்கள் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கைப் பொலிஸார் பெரும்பான்மையானோர் தமக்கே வாக்களித்ததாக சில வேட்பாளர்கள் தெரிவித்த போதிலும், அந்தக் கூற்றுக்கள் பொய்யானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக கேஸ் சிலிண்டரைச் சுற்றியே இதுவரை இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பலர் இக்கூட்டணியில் இணைய உள்ளனர்.

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் என்ற வகையில் எமது கட்சியின் கருத்தையும் இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும். சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த இந்த நாட்டில் இரண்டு வருடங்களில் மீண்டு வந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சி என்ற வகையில் தீர்மானித்தோம். அதைச் செய்யக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.

எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும் ஜனாதிபதி தெளிவான வெற்றியைப் பெறக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்டத்தில் உள்ள சாதாரணமானவர்கள் அந்த முடிவை அமைதியாக எடுத்துள்ளனர். நாட்டை வீழ்ச்சியடைந்த மோசமான பள்ளத்தில் இருந்து தூக்கி நிறுத்த அவர் செயல்படுத்திய திட்டம் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles