முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2025 ஆகஸ்டில்தான் முடிவடைகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே ஏற்புடையதாக அமையும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அவசியம். கடந்தமுறை சம்பள நிர்ணய சபை ஊடாகவே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது. இம்முறையும் அவ்வாறு நடக்கும் என நம்புகின்றேன்.” – எனவும் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.