ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒருபோதும் இணைந்து செயற்படபோவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
” ரணிலும், சஜித்தும் இணைவார்கள் என அரசிடம் பணம் வாங்கிக்கொண்டு ஊடகங்கள் எனக் கூறிக்கொள்ளும் சில சேறு பூசும் தரப்புகள் பிரசாரம் முன்னெடுத்துவருகின்றன. ரணிலும் ,சஜித்தும் ஒருபோதும் இணையமாட்டார்கள். இதனை பொறுப்புடன் இந்த நாடாளுமன்றத்தில் கூறுகின்றேன். எனவே, போலி பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.










