ரணிலுடன் பேச்சு நடத்தி தீர்வை பெறலாம் – சுமந்திரன் நம்பிக்கை

“தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்.”

– இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக ஜனாதிபதியிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து ஜூலை மாதத்தின் பின் உரிய நடவடிக்கை எடுப்பதற்கே ஜனாதிபதி இவ்வாறு கால அவகாசம் விதித்துள்ளார். அதுவரை நாம் பொறுமையுடன் காத்திருக்கின்றோம்.

எமது பிரச்சினைக்கான தீர்வைத் தேடி நாம் இந்தியா செல்ல வேண்டிய தேவை இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நாம் நம்புகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles