ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் தமது கடமைகளை (18) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமதி முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் அதே கல்வி வலயத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான கோட்டம் 3 இன் கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
இவருடைய காலப்பகுதியிலேயே கோட்டம் 3 இன் க.பொ.த சாதாரண தரத்திலும் உயர் தரத்திலும் மாணவர்களின் பெறுபேறுகள் அதிகரித்தன.
கோட்டம் 3 இன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர். மேலும் இவருடைய காலப்பகுதியிலேயே கலை, இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்ற இவருக்கு ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை பி.கேதீஸ்










