ரணிலை கைவிட்ட ரணதுங்கவின் அடுத்த இலக்கு என்ன?

ஐக்கிய தேசியக்கட்சியின் அனைத்துவிதமான அரசியல் செயற்பாடுகளில் இருந்தும் தான் ஒதுங்குவதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று அறிவித்தார்.

ஐ.தே.கவின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் விலகியுள்ள அவர், இந்த முடிவுக்கான காரணங்களை பட்டியலிட்டு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக்கட்சியின்கீழ் போட்டியிட்டார். எனினும், வெற்றி கிடைக்கவில்லை.

தேர்தலின் பின்னர் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கான சாதகமான பணிகள் இடம்பெறாத நிலையிலேயே ரணதுங்க் ஐகேவில் இருந்து வெளியேறியுள்ளார்.

சம்பிக்க ரணவக்கவின் 43 என்ற அரசியல் இயக்கம் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Related Articles

Latest Articles