முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கக் கோரும் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுடன் தானும் இணைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது, இலங்கையைக் காப்பாற்ற நின்ற தலைவர் என்று அவர் ரணில் விக்ரமசிங்கவை பாராட்டியுள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளை தகுதியற்றவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் அதே வேளையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தொடர்வதை விட “உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த” அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.










