ரணில் ஆளுமைமிக்க தலைவர் – கொள்கை விளக்க உரை அதற்கு சான்று! ராதா புகழாரம்

” ரணில்  விக்கிரமசிங்க ஆளுமை மிக்க அரசியல்வாதி. தேர்ச்சி பெற்ற இராஜதந்திரி. அனைவரையும் அரவணைத்து  பயணிக்ககூடியவர் என்பதற்கு அவரின் கொள்கை விளக்க உரை சான்று.  கொள்கை விளக்க உள்ளடக்கங்களை நடைமுறைபடுத்த முடியுமாக இருந்தால் அதுவே எமது நாட்டின் வெற்றியாக அமையும்.”

இவ்வாறு நுவரெலியா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும்,  மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நீண்ட ஒரு இடைவேளைக்கு பின்பு இலங்கை ஜனாதிபதி ஒருவரால் பாராளுமன்ற த்தில் ஆற்றப்பட்ட சிறந்த ஒரு உரையாகவே இதனை நான் பார்க்கின்றேன்.ஏனெனில் கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்கள் தாங்கள் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியெனவும் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் பாராளுமன்றத்தில் உரையாற்றியதை நாங்கள் பாரத்திருக்கின்றோம்.

ஆனால் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ச தான் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி என்பதை தெரிவித்திருக்கின்றார்.அதுவே உண்மை பாராளுமன்றத்தில் அவருக்கு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வாக்களித்தார்களா?இல்லையா?என்பது வேறு விடயம்.

ஏனெனில் அது ஒரு இரகசிய வாக்கெடுப்பு ஆனால் அந்த வாக்களிப்பு நிறைவடைந்து வெற்றி பெற்ற பின்பு அவர் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கம் ஜனாதிபதியாகவே இருப்பார்.அதனை கடந்த கால ஜனாதிபதி உணராமையும் அவருடைய ஆட்சி கவிழ்ந்தமைக்கு ஒரு முக்கிய  காரணமாகும்.

இன்றைய ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில் பல விடயங்களையும் குறிப்பிட்டிருக்கின்றார்.குறிப்பாக வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் இளைஞர்களின் மன உணர்வுகள்.விவசாயிகளின் பிரச்சினைகள் என அனைத்து துறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் எனவே இந்த அனைத்து விடயங்களையும் செய்து முடிக்க முடியுமாக இருந்தால் இலங்கை அரசியலில் சிறந்த ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்ஹ இருப்பார்.இவற்றை செய்து முடிக்க முடியாவிட்டால் இவரும் ஏனையோரைப் போலவே சாதாரண ஒரு ஜனாதிபதியாகவே பேசப்படுவார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கின்ற பொழுது நிச்சயமாக மலையக மக்களின் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி அவற்றிற்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

அதே நேரத்தில் இந்த நாட்டில் இலஞ்சத்தை ஒழிப்பதற்கும் இளைஞர்களின் மன எழுச்சிக்கும் அவர்களின் அகிம்சை போராட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.இவை அனைத்தையும் செய்து முடிக்க முடியுமாக இருந்தால் நிச்சயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.” – என்றார் ராதா .

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles