ரணில் ஓகே சொன்னால் நாங்களும் ரெடி!

“ எம்முடன் பயணிக்க தயாரெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாமும் தயார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்தார்.

சமகால அரசியல் விவகாரம் தொடர்பில் அவரிடம் எழுப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் வழங்கிய பதில்களும் வருமாறு,

கேள்வி – நற்செய்தி என்ன?
பதில் – நாம் வெற்றிபெறுவோம் என்பதுதான்…

கேள்வி – ஜனாதிபதி வேட்பாளர் யார்?
பதில் – அது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

கேள்வி – தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெறுகின்றதே…
பதில் – காலம் உள்ளது, நாம் அறிவித்த பிறகுதான் பலம் வாய்ந்த வேட்பாளர் தெரியவரும்.

கேள்வி – பொதுவேட்பாளர் பற்றி பேசப்படுகின்றதே?
பதில் – பொதுவேட்பாளராகக்கூட இருக்கலாம். கடந்த காலங்களிலும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் பொதுவேட்பாளர்களே களமிறங்கினர்.

கேள்வி – அடுத்த ஆட்சி மொட்டு கட்சியினதா, பொது வேட்பாளரின் உடையதா?
பதில் – எமது ஆட்சியாகவே அது அமையும்.வெற்றி நிச்சயம்.

கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் திட்டம் உள்ளதா?

பதில்    இன்னும் அவ்வாறான முடிவை எடுக்கவில்லை. எம்முடன் பயணிக்க அவர் தயாரெனில் நாம் ஆதரவு வழங்குவோம்.

கேள்வி – இதற்காக உங்களின் நிபந்தனைகள் எவை?
பதில் – அவற்றை ஊடகங்களிடம் கூறமுடியாது.

Related Articles

Latest Articles