ரணில் – சஜித் இன்று சந்திப்பு! 11 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்க முற்போக்கு கூட்டணி திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் இன்று மாலை 3 மணிக்கு சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக பேச்சு நடத்தப்படவுள்ளன.

சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டை பெறும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். கட்சிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

இதன்ஓர் அங்கமாகவே பிரதான எதிர்க்கட்சியுடன் இன்று பேச்சு நடத்துகின்றார்.

 அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவுள்ளது.

Related Articles

Latest Articles