ஐக்கிய தேசியக் கட்சியும், தமது கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்றே ஆதரவாளர்கள் கருதுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இரு கட்சிகளினதும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம்வரை இணைய வேண்டும் என்பதே பொதுக்கருத்து. இதற்கமைய எவ்வாறு இணைவது, இதற்குரிய பொறிமுறை என்னவென்பது பற்றி தற்போது பேச வேண்டும்.
விரைவில் இரு தரப்பும் இணக்கத்துக்கு வரும் என நம்புகின்றேன். இரு தரப்பும் இணைந்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லது.” – என்றார்.