” ரணிலும், சஜித்தும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அந்தவகையில் ‘ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்’ என்ற யோசனையை ஆதரிக்கின்றேன்.” – என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ரணிலும், சஜித்தும் காலைவாரிக்கொள்ளாமல் இணைந்து செயற்படுவதையே நானும் விரும்புகின்றேன். இவர்களை இணைப்பதற்காகத்தான் 2014 இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டேன், சஜித், ரணில் ஒரு மேடையில் ஏற வேண்டும் என்பதே ஒரே நிபந்தனையாக இருந்தது. இதன்படி இருவரும் இணைந்தனர். ஒன்றாக மேடையேறினர். அதன்பின்னரே அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
2019 இல் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு பெரும்பாடுபட்டவன் நான், எனவே, இவர்கள் இணைந்து செயற்பட்டால் நல்லது.
அதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கட்சி வேட்பாளராக அல்லாமல், பொதுவேலைத்திட்டத்துடனேயே வருவார்.” – என்றார்.
