ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முன்னர், பிரதமரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஜனாதிபதி பதவி விலக முன்னர், பிரதமர் தனது பதவியை துறக்க வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் ஜனாதிபதி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்விரண்டும் இடம்பெறாமல், குறுக்கு வழியில் ஜனாதிபதியாக பிரதமர் முற்பட்டால், மக்கள் வீதிக்கு இறங்கி விரட்டியடிப்பார்கள். எனவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.










