” மலையக பெருந்தோட்ட மக்களின் உழைப்பால்தான் இந்நாட்டுக்க டொலர் வருமானம் கிடைக்கின்றது. ஆனால் அவர்களுக்கு உரிய கவனிப்பு இல்லை.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் அப்பாவி மக்களை தோட்ட உதவி முகாமையாளர் ஒருவர் தனது அடியாட்களுடன் சென்று விரட்டியுள்ளார். தற்காலிக குடியிருப்பையும் அடித்து நொறுக்கியுள்ளார்.
இது தவறான செயலாகும். அரச தோட்டமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பயங்கரமாகும். இதற்கு அரசு பொறுப்பு கூற வேண்டும்.
தோட்ட மக்களுக்கு நிதியை வழங்க அரசு முன்வரவில்லை. அதிகாரிகள் மட்டுமல்ல அமைச்சரும் இச்சம்பவத்துக்கு பொறுப்புகூற வேண்டும்.” – எனவும் சஜித் வலியுறுத்தினார்.
