ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
தாயும், மகனும், மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இன்று பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடனேயே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.










